அமெரிக்காவின் மிகப் பெரிய ரேடாரை அழித்துவிட்டோம்: ஈரான் ராணுவம் தகவல்

0
15

கத்​தார் தலைநகர் தோஹா​வில் அமெரிக்​கா​வின் மிகப்​பெரிய விமானப் படைத் தளம் உள்​ளது. அங்கு 10,000-க்​கும் மேற்​பட்ட அமெரிக்க வீரர்​கள் முகாமிட்டு உள்​ளனர். நூற்​றுக்​கும் மேற்​பட்ட போர் விமானங்​கள் நிலைநிறுத்​தப்​பட்டு உள்​ளன.

தோஹா விமானப் படைத்​தளத்​தில் இருந்து புறப்​படும் அமெரிக்க போர் விமானங்​கள், ஈரான் மீது குண்​டுமழை பொழிந்து வரு​கின்​றன.

இந்த சூழலில் தோஹா விமானப் படைத் தளத்​தில் நிறு​வப்​பட்​டிருந்த அமெரிக்​கா​வின் ஏஎன்​/எப்​பிஎஸ்​-132 என்ற அதிநவீன ரேடாரை ஏவு​கணை தாக்​குதல் மூலம் அழித்​து​விட்​ட​தாக ஈரான் கூறி​யுள்​ளது.

இதுதொடர்​பாக அந்த நாட்டு ராணுவம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “அமெரிக்​கா​வின் ஏஎன்​/எப்​பிஎஸ்​-132 ரேடார் சுமார் 5,000 கி.மீ. தொலைவு வரை கண்​காணிக்​கும் திறன்​கொண்​டது. கத்​தா​ரில் நிறு​வப்​பட்​டிருந்த இந்த ரேடாரை ஏவு​கணை மூலம் அழித்​து​விட்​டோம்’’ என கூறப்பட்டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here