கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை பகுதியில் ரூ 35 கோடி மதிப்பில் சாலைப்பணி மற்றும் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று (20.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ. ராஜேஷ் குமார் ஆகியோர் இப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வில் மீன்வளத்துறை துணை இயக்குநர் சின்ன குப்பன், மீனவ பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.