கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் EMIS கல்வியில் மேலாண்மை வலைத்தள பதிவில் உள்ள மாணவர்களை முழுமையாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.