ஈரான் அணு மின் நிலையம் தகர்க்கப்பட்டால் வளைகுடா நாடுகளுக்கு கதிரியக்க பாதிப்பு ஏற்படும்: சர்வதேச அணுசக்தி முகமை நிபுணர்கள் கவலை

0
23

ஈரான் அணு மின் நிலையம் தகர்க்கப்பட்டால், வளை​குடா நாடு​களில் கதிரியக்க பாதிப்பு ஏற்​படும் என சர்​வ​தேச அணுசக்தி முகமை நிபுணர்​கள் கவலை தெரி​வித்​துள்​னர்.

ஈரான் மீது அமெரிக்க மற்​றும் இஸ்​ரேல் கூட்​டுப்​படை தொடர் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. ஈரானின் புஷர் அணுமின் நிலை​யம் அருகே கடந்த சனிக்​கிழமை குண்டு வீசப்​பட்​டது. இது அணு மின்​நிலை​யத்​திலிருந்து 350 மீட்​டர் தொலை​வில் விழுந்து வெடித்​தது. இங்கு நடத்​தப்​படும் தொடர் தாக்​குதலால், ஈரான் தலைநகர் டெஹ்​ரான் கதிரியக்க பாதிப்​புக்கு ஆளாவதை​விட வளை​குடா நாடுகள்​தான் அதிக பாதிப்​புக்கு ஆளாகும் என ஈரான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி எச்சரிக்கை விடுத்​துள்​ளார்.

இது குறித்து சர்​வ​தேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) நிபுணர்கள் மேலும் கூறிய​தாவது: புஷர் அணு மின் நிலையம் ஈரானின் தென் பகு​தி​யில் அமைந்​துள்​ளது. இங்கு 1,000 மெகா வாட் திறனுள்ள அணு உலை உள்​ளது. தற்​போது செயல்​பாட்​டில் உள்ள அணு உலை​யில், ரஷ்யாவிடம் இருந்து வாங்​கப்​படும் 4.5% செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யம் பயன்​படுத்​தப்​படு​கிறது. புஷர் அணு மின் நிலை​யத்​தில் 282 டன்​கள் கதிரியக்க பொருட்​கள் உள்​ளன.

இவற்​றில் 72 டன்​கள் அணு உலை​யில் எரிபொருளாக பயன்​படுத்​தப்​படும் யுரேனி​யம். ஏற்​கெனவே எரியூட்டப்பட்ட யுரேனி​யம் கழி​வு​கள் 210 டன் அளவுக்கு சேமிப்பு கிடங்​கில் வைக்​கப்​பட்​டுள்​ளன. இவற்​றில் உள்ள ஆபத்​தான சீசி​யம்​-137 ஐசோடோப், செர்​னோபில் அணு உலை விபத்​தில் வெளிப்​படுத்​தி​யதை​விட 10 மடங்​குக்கு மேல் கதிரியக்க பாதிப்பை ஏற்​படுத்​தும்.

புஷர் அணு மின் நிலை​யம் தாக்​கப்​பட்டு கதிர்​வீச்சு பாதிப்பு ஏற்​பட்​டால், வளை​குடா நாடு​களின் மண் மற்​றும் கடல்​நீர் கதிரியக்க பாதிப்​புக்கு உட்​படும். இது பல ஆண்​டு​கள் நீடிக்​கும். ஏராளமான மக்​கள் உயி​ரிழப்​பர். புற்றுநோய் பாதிப்பு அதி​கரிக்​கும்.

இதுத​விர ஈரானில் நடான்ஸ் மற்​றும் பர்தோ என்ற 2 யுரேனி​யம் செறிவூட்​டல் மையம் உள்​ளது. இஸ்​பஹான் பகு​தி​யிலும் யுரேனி​யம் மையம் உள்​ளது. அராக் பகு​தி​யில் அணுசக்தி மின் நிலை​யங்​களில் பயன்​படுத்​தப்​படும் 40 மெகா​வாட் கடின நீர் உலை உள்​ளது. இங்கு கதிர்​வீச்சு பாதிப்​பு ஏற்​பட்​​டாலும்​ பெரும்​ ​பா​திப்​பு ஏற்​படும்​ அ​பா​யம்​ உள்​ளது. இவ்​​வாறு அவர்​கள்​ கூறி​யுள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here