
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வேப்பமூடு ஜங்சனில் உள்ள சர். சி. பி. இராமசாமி ஐயர் நினைவு பூங்காவில், தமிழக அரசு சார்பில் ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் பொன்னப்ப நாடார் சிலை அமைக்கப்படுகிறது. நேற்று, 6 அடி உயரச் சிலை மண்டபத்தின் நடுவில் நிறுவும் பணி நடைபெற்றது. இதனை மேயர் மகேஷ், முன்னாள் எம்எல்ஏ பொன் விஜயராகவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.













