புஜைரா குளோபல் செஸ் தொடரில் பட்டம் வென்றார் இந்தியாவின் பிரணவ்

0
54

 ஐக்​கிய அரபு அமீகரத்​தில் புஜைரா நகரில் புஜைரா குளோபல் சூப்​பர் ஸ்டார்ஸ் செஸ் தொடர் நடை​பெற்​றது. இதில் உலக ஜூனியர் சாம்​பிய​னான இந்​தி​யா​வின் பிரணவ் வெங்​கடேஷ் 9-க்கு 7 புள்​ளி ​களை குவித்து முதலிடம் பிடித்து சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

பிரணவ் தனது கடைசி ஆட்​டத்​தில் ஸ்பெ​யின் கிராண்ட் மாஸ்​ட​ரான ஆலன் பிச்​சோட்​டுடன் மோதி​னார். வெள்ளை காய்​களு​டன் விளை​யாடிய பிரணவ் 54-வது நகர்த்​தலின் போது வெற்​றியை வசப்​படுத்​தி​னார். இந்​தத் தொடரில் பிரணவ் 9 சுற்​றுகளில் 5-ல் வெற்றி பெற்​றார். 4 சுற்​றுகளை டிரா செய்​திருந்​தார். சாம்​பியன் பட்​டம் வென்ற பிரணவுக்கு ரூ.20.25 லட்​சம் பரிசுத் தொகை வழங்​கப்​பட்​டது. மேலும் இஎல்ஓ ரேட்​டிங்​கில் 28 புள்​ளி​களை​யும் பிரணவ் பெற்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here