Home உலக செய்திகள் ‘நிலவில் புதிய தளம் அமைக்கும் திட்டத்தில் அமெரிக்காவுடன் இந்தியாவின் இஸ்ரோ இணைய வேண்டும்’

‘நிலவில் புதிய தளம் அமைக்கும் திட்டத்தில் அமெரிக்காவுடன் இந்தியாவின் இஸ்ரோ இணைய வேண்டும்’

0

நில​வில் புதிய தளம் அமைக்​கும் திட்​டத்​தில் அமெரிக்​காவுடன் இந்தியாவின் இஸ்ரோ இணைய வேண்​டும் என்று அந்த நாட்டு தூதர் செர்ஜியோ கோர் அழைப்பு விடுத்துள்ளார்.

கர்​நாடக தலைநகர் பெங்​களூரு​வில் 3 நாள் விண்​வெளி கண்காட்சி நேற்று தொடங்​கியது. இதன் தொடக்க விழா​வில் இந்தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர் பங்கேற்றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: நாங்​கள் மீண்​டும் நில​வுக்கு பயணம் மேற்​கொள்ள உள்​ளோம். நில​வில் புதி​தாக ஓர் தளத்தை அமைக்க திட்​ட​மிட்டு இருக்​கிறோம். இந்த திட்​டத்​தில் இந்​தி​யா​வின் இஸ்ரோ அமைப்​பும் இணைய வேண்​டும் என்று அமெரிக்​கா​வின் நாசா அழைப்பு விடுத்​திருக்​கிறது.

இதை நினை​வுபடுத்தி மீண்​டும் நான் அழைப்பு விடுக்​கிறேன். நிலவு பயண திட்​டத்​தில் எங்​களோடு இந்​தியா இருக்க வேண்​டும் என்று விரும்​பு​கிறோம். அமெரிக்​கா​வின் ஆர்​டெமிஸ் திட்​டத்​தின் கீழ் நில​வு, செவ்​வாய்க் கிரகம் தொடர்​பான ஆய்​வு​கள் மேற்​கொள்​ளப்பட உள்​ளன. இந்த திட்​டத்​தில் இந்​தி​யா​வும் அதி​காரப்​பூர்​வ​மாக இணைந்​திருக்​கிறது. இதை முழு​மனதுடன் வரவேற்​கிறேன்.

இந்​திய விண்​வெளி வீரர் சுபன்ஷு சுக்லா கடந்த ஆண்டு சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு சென்​றார். அமெரிக்​கா​வின் ஆக்​கப்​பூர்​வ​மான பங்​களிப்​பால் இந்​திய வீரர் புதிய சாதனையை படைக்க முடிந்​தது. தற்​போது இந்​திய விண்​வெளித் துறை​யில் பல்​வேறு தனி​யார் நிறு​வனங்​கள் கால் பதித்​துள்​ளன. இந்​திய நிறு​வனங்​களுக்​காக அமெரிக்க விண்​வெளி சந்​தை​யின் கதவு​கள் திறந்து இருக்​கிறது.

உங்​களை ஆவலோடு வரவேற்​கிறோம். வாஷிங்​ட​னும் டெல்​லி​யும் இணைந்​தால் விண்​வெளி துறை​யில் புதிய உச்​சங்​களை தொட முடி​யும். நமக்கு வானம் மட்​டுமே எல்​லை​யாக இருக்க முடி​யும். சர்​வ​தேச விண்​வெளி பொருளா​தா​ரத்தை ஊக்​குவிக்க இரு நாடுகளும் இணைந்து பணி​யாற்​றலாம். நாம் இணைந்து நிலவுக்கு பயணம் மேற்​கொள்​ளலாம். இவ்​வாறு அமெரிக்​க தூதர்​ செர்​ஜியோ கோர்​ தெரி​வித்​தார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version