Home உலக செய்திகள் ஈரான் கப்பல் மீதான தாக்குதல் – வீடியோ வெளியிட்ட அமெரிக்க ராணுவம்

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் – வீடியோ வெளியிட்ட அமெரிக்க ராணுவம்

0

ஈரான் எண்ணெய் கப்பல் மீதான தாக்​குதல் வீடியோவை அமெரிக்க ராணுவம் நேற்று வெளி​யிட்​டது.

கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே மீண்​டும் போர் தீவிரமடைந்து உள்​ளது.

இந்த சூழலில் ஈரானின் கச்சா எண்​ணெய் ஏற்​றுமதி தளமான கார்க் தீவின் மீது அமெரிக்க ராணுவம் நேற்று முன்​தினம் ஏவுகணை​களை வீசி தாக்​குதல் நடத்​தி​யது. இதற்கு பதிலடி​யாக அமெரிக்க போர்க்​கப்​பல்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் ஏவுகணை​களை வீசி​யது. இந்த ஏவு​கணை​கள் நடு​வானில் அழிக்கப்பட்​டன.

ஈரானை பழி​வாங்​கும் வகை​யில் ஓமன் வளை​கு​டா​வின் ஹார்முஸ் ஜலசந்தி வழி​யாக சென்று கொண்​டிருந்த 3 ஈரானிய எண்​ணெய் கப்​பல்​கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்​குதல் நடத்தியது. இதில் 3 கப்​பல்​களும் கடலில் மூழ்​கின. இதில் ஒரு கப்பல் கடலில் மூழ்​கும் வீடியோவை அமெரிக்க ராணுவம் நேற்று சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டது.

அதோடு வெளி​யிட்ட பதிவில், “ஓமன் வளை​குடா பகு​தி​யில் ஈரானின் கைலோ கப்​பல் கடலில் மூழ்​கு​கிறது. கடலுக்கு அடி​யில் ஈரான் போர்க்​கப்​பல்​கள் ஏற்​கெனவே மூழ்கி கிடக்​கின்​றன. அந்த கப்​பல்​களு​டன் கைலோவும் இணை​கிறது. துல்​லிய தாக்​குதலை நடத்​திய அமெரிக்க வீரர்​களுக்கு நன்றி” என்று தெரிவிக்​கப்​பட்டுள்​ளது.

6 கப்​பல்​கள் மீது தாக்​குதல்

இதுதொடர்​பாக ஈரான் ராணுவம் நேற்று வெளி​யிட்ட அறிக்கையில், “அமெரிக்​கா​வின் அத்​து​மீறல்​களுக்கு தகுந்த பதிலடி கொடுக்​கப்​பட்டு வரு​கிறது. அந்த நாட்​டின் 3 போர்க்​கப்பல்​கள் மற்​றும் அமெரிக்​காவோடு தொடர்​புடைய 3 எண்ணெய் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்தி உள்​ளோம்” என்று தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

மேலும் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் நுழைந்த அமெரிக்​கா​வின் ஆளில்​லாத ட்ரோன் படகை தகர்த்​திருப்​ப​தாக​வும் ஈரான் ராணுவ வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

ஈரான் சபா​நாயகர் எச்​சரிக்கை

ஈரான் நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப் பேசி​ய​தாவது: ஈரானின் நலனுக்கு எதி​ராக செயல்​படும் நாடு​களுக்கு தகுந்த பதிலடி கொடுக்​கப்​படும். எங்​களது பதில் தாக்​குதல் அதிவிரைவாக நடத்​தப்​படும். இந்த தாக்​குதல் மிக மோசமானதாக, அதிக வலியைக் கொடுப்​ப​தாக​வும் இருக்​கும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்​ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version