வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய ஷியா தனிச்சட்ட வாரியம் கடும் கண்டனம்

0
13

வங்​கதேசத்​தில் இந்து சிறு​பான்​மை​யினர் மீது நடத்​தப்​படும் தாக்​குதலுக்கு அனைத்து இந்​திய ஷியா தனிச் சட்ட வாரியம் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

அனைத்து இந்​திய ஷியா தனிச் சட்ட வாரி​யத்​தின் (ஏஐஎஸ்பிஎல்பி) வரு​டாந்​திர கூட்​டம் லக்​னோ​வில் நேற்று முன்தினம் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​துக்​குப் பின்​னர் ஏஐஎஸ்பிஎல்பி பொதுச் செய​லா​ளர் மவுலானா யசூப் அப்​பாஸ் கூறிய​தாவது: வங்​கதேசத்​தில் இந்​துக்​களுக்கு எதி​ராக இழைக்கப்படும் கொடுமை​களை இந்​தக் கூட்​டம் வன்​மை​யாகக் கண்​டித்​தது.

மேலும், அப்​பாவி மனிதர்​கள் யாரை​யும் கொல்​வதை இஸ்​லாம் கடுமை​யாகத் தடுக்​கிறது என்​றும், மதத்​தின் பெய​ரால் இத்​தகைய மனி​தாபி​மானமற்ற செயல்​களில் ஈடு​படு​பவர்​கள் அதிலிருந்து விலகி இருக்க வேண்​டும் என்​றும் கூட்​டத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது.

மேலும் இந்​தக் கூட்​டத்​தில், வக்பு திருத்த சட்​டத்தை திரும்​பப் பெற வேண்​டும், பொது சிவில் சட்​டம் மற்​றும் தேசிய குடிமக்​கள் பதிவேடு ஆகிவற்றை அமல்​படுத்​தும் முடிவை திரும்​பப் பெற வேண்​டும் என்பன உட்பட 23 அம்ச தீர்​மானங்​கள் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டன. இவ்​வாறு அவர்​ தெரி​வி்த்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here