இந்தியா யு-19 – இலங்கை யு-19 அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா யு-19 அணி 105.2 ஓவர்களில் 411 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மனால் சவுகான் 150, குஷராக்ரா ஓஜா 111 ரன்கள் விளாசினர்.
இலங்கை யு-19 முதல் இன்னிங்ஸில் 52.1 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக துல்னித் சிகேரா 31, சேத்மிகா செனேவிரத்னே 25 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா யு-19 அணி 40.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. லக் ஷயா ராய்ச்சந்தனி 100 ரன்களும், மனால் சவுகான் 51 ரன்களும் விளாசினர்.
தொடர்ந்து 472 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை யு-19 அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 76.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக செனுஜா வெகுனகோடா 64, கேப்டன் விமத் தினசரா 64, சேத்மிகா செனேவிரத்னே 42 ரன்கள் சேர்த்தனர். இந்தியா யு-19 அணி சார்பில் ரோஹித் யாதவ் 4, சிகுருபதி வெங்கடா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா யு-19 அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
