Home உலக செய்திகள் ஈரானிடமிருந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல்

ஈரானிடமிருந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல்

0

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏழு ஆண்டுகளில் முதன்முறையாக ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது.

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்துள்ளன. உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியா, அமெரிக்கத் தடைகள் காரணமாக மே 2019 முதல் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”மத்திய கிழக்கு பதற்றத்துக்கு மத்தியில், இந்திய நிறுவனங்கள் ஈரான் உட்பட பல நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியுள்ளன. மேலும், ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பணம் செலுத்துவதில் எந்தத் தடையும் இல்லை. இதனால் வரும் மாதங்களுக்கான இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணம் செலுத்துதல் தொடர்பான தடைகள் காரணமாக இந்தியாவிற்கான ஈரானிய எண்ணெய் கப்பல், சீனாவிற்குத் திருப்பி விடப்பட்டதாக வந்த செய்திகளையும் மத்திய அரசு மறுத்துள்ளது.

2018-ல் அமெரிக்காவின் தடைகள் கடுமையாக்கப்படுவதற்கு முன்பு, ஈரான் லைட் மற்றும் ஈரான் ஹெவி ஆகிய இரண்டு வகை எண்ணெய்களையும் இறக்குமதி செய்து, ஈரானிய கச்சா எண்ணெயின் மிகப்பெரிய வாங்கும் நாடாக இந்தியா இருந்தது. அப்போது ஈரானிய கச்சா எண்ணெய் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சுமார் 11.5 சதவீதமாக இருந்தது.

பின்னர், அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்த பிறகு, ஈரானிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தியது.

தற்போதைய போர் காரணமாக ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா பல தளர்வுகளை அறிவித்துள்ளதால், மீண்டும் இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version