வங்கதேசத்துக்கு 5,000 டன் டீசல் வழங்குகிறது இந்தியா!

0
21

இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு இன்று குழாய் வழியாக 5,000 டன் டீசல் வழங்கப்பட உள்ளது. இந்த டீசல் பர்பதிபூர் எல்லை வழியாக வங்கதேசத்திற்குள் குழாய் வழியாக அனுப்பப்படும்.

இதுகுறித்து பேசிய வங்கதேச பெட்ரோலியக் கழகத்தின் (பிபிசி) தலைவர் முகமது ரெசானூர் ரஹ்மான்,”இந்தியாவுடன் எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது, அந்த ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் குழாய் வழியாக இந்தியா வங்கதேசத்திற்கு 1,80,000 டன் டீசலை வழங்கும். இப்போது வழங்கப்படும் 5,000 டன் டீசல் அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஆறு மாதங்களுக்குள் குறைந்தது 90,000 டன் டீசல் வங்கதேசத்திற்கு இறக்குமதி செய்யப்பட வேண்டும். இன்று 5,000 டன் டீசல் வந்து சேருகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள், முழு ஆறு மாதங்களுக்குமான மொத்த டீசலை நாங்கள் பெறுவோம்” என்று கூறினார்.

நாட்டில் தற்போதைய எரிபொருள் நிலைமை குறித்து வங்கதேச எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தற்போதைய நெருக்கடி சூழ்நிலையில், சந்தையில் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கும் முயற்சியில் சில நேர்மையற்ற வர்த்தகர்கள் சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து வைத்திருப்பதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நெருக்கடியை சரிசெய்ய, வாகன வகைகளின் அடிப்படையில் அரசாங்கம் ஏற்கனவே எரிபொருள் விநியோக வரம்புகளை நிர்ணயித்துள்ளது. ஆயினும்கூட, பல்வேறு பெட்ரோல் பம்புகள்/நிரப்பு நிலையங்களில், அரசாங்கம் அங்கீகரித்த வரம்பை விட அதிகமாக எரிபொருள் விற்கப்படுவதும், அதிக லாபத்திற்காக கூடுதல் இருப்பு பதுக்கி வைக்கப்படுவதும், திறந்த சந்தையில் எரிபொருளை விற்று கடத்தலில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சூழலில், சட்டவிரோதமாக எரிபொருள் பதுக்குவதை தடுக்கவும், நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி விற்பனை செய்வதைத் தடுக்கவும், வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here