Home தேசிய செய்திகள் இண்டியா கூட்டணியை கலைக்கலாம்: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கருத்து

இண்டியா கூட்டணியை கலைக்கலாம்: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கருத்து

0

மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று கூறியதாவது: மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணி கூட்டம் நடைபெறவில்லை. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் கூட்டம் கூட்டப்பட வேண்டும். மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே இண்டியா கூட்டணி என்றால் அதை கலைத்து விடலாம்.

எதிர்க்கட்சிகள் தனித்தனியே செயல்படலாம். ஆனால் சட்டப்பேரவை தேர்தலுக்கும் இக்கூட்டணி பொருந்தும் என்றால் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இண்டியா கூட்டணியில் முக்கிய தலைமை, முக்கிய கட்சி அல்லது எதிர்கால உத்திக்கான திட்டங்கள் குறித்து எந்த தெளிவும் இல்லை. இந்த கூட்டணி தொடரும் என்பதிலும் தெளிவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version