Home தேசிய செய்திகள் இந்தியாவில் ஜூலையில் மழை குறையும்: ‘எல் நினோ’ பாதிப்பே காரணம் என ஐஎம்டி கணிப்பு

இந்தியாவில் ஜூலையில் மழை குறையும்: ‘எல் நினோ’ பாதிப்பே காரணம் என ஐஎம்டி கணிப்பு

0

எல் நினோ பாதிப்​பால் இந்​தி​யா​வில் ஜூலை மாதத்தில் வழக்​கத்​தை​விட மழை அளவு குறை​யும் என இந்​திய வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இந்த ஆண்டு உலகம் முழு​வதும் தீவிர ‘எல் நினோ’ ஏற்​படும் என வானிலை ஆய்​வாளர்​கள் எச்​சரித்​துள்​ளனர். இதன்​படி, பசிபிக் பெருங்​கடலில் ‘எல் நினோ’ காலநிலை மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. இதன் காரண​மாக, இந்​தி​யா​வில் கடந்த ஜூன் மாதத்​தில் 12 ஆண்​டு​களில் இல்​லாத அளவு வறட்சி நில​வியது. இந்த மாதத்​தில் வழக்​கத்​தை​விட 40% குறை​வாக மழை பெய்​துள்​ளது.

இதைத் தொடர்ந்​து, தென்​மேற்கு பரு​வ​மழை​யின் முக்​கிய மாத​மான ஜூலை​யிலும் வழக்​கத்தை விடக் குறை​வான மழையே பெய்​யக்​கூடும் என்று இந்​திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்​டி) எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. ஜூலை மாத மழைப்​பொழிவு அதன் நீண்​ட​கால சராசரி​யான 28 செ.மீ-ல் 94%-க்​கும் குறை​வாகவே இருக்​கும் என ஐஎம்டி இயக்​குநர் மிருத்​யுஞ்​சய் மொஹபத்ரா தெரி​வித்​துள்​ளார்.

இதன் காரண​மாக நிலத்​தடி நீர் மட்​டம் சரிந்து நாட்​டின் விவ​சாய உற்​பத்தி பெரு​மள​வில் பாதிக்​கலாம். ஜூலை மாதம் நெல், சோயா பீன்​ஸ், பருத்தி மற்​றும் பருப்பு வகைகளை பயி​ரிடும் முக்​கிய கால​மாகும். ஜூன் 25 நில​வரப்​படி, பயிர் சாகுபடி பரப்பு கடந்த ஆண்​டை​விட 23% சரிந்​துள்​ளது. மத்​தி​யப் பிரதேசம், மகா​ராஷ்டி​ரா, குஜ​ராத் உள்​ளிட்ட 12 மாநிலங்​களில் உள்ள 315 மாவட்​டங்​கள் இதனால் பாதிக்​கப்​படலாம் என கண்​டறியப்​பட்​டு, அவசரக்​கால திட்​டங்​கள் தயார் செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

மழைப்​பொழிவு குறைவ​தால் அரிசி போன்ற அத்​தி​யா​வசிய உணவுப் பொருட்​களுக்​குப் பாதிப்பு இல்லை என்​றாலும், எண்​ணெய் வித்​துக்​கள் மற்​றும் காய்​கறிகளின் விலை உயரும் அபா​யம் உள்​ளது. மேலும், மழை பற்​றாக்​குறை​யால் நில​வும் கடுமை​யான வெப்​பம் காரண​மாக, மின்​சா​ரம் மற்​றும் நீர்ப்​பாசனத்​துக்​கான தேவை கணிச​மாக அதி​கரித்​துள்​ளது. இது நாட்​டின் பொருளா​தா​ரத்​துக்​கும், மின் விநி​யோகத்​துக்​கும் புதிய சவால்​களை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

பரு​வ​மழை பற்​றாக்​குறை​யானது நாட்​டின் பொருளா​தா​ரத்​துக்கு கவலை அளிக்​கும் விஷ​யம் என மத்​திய நிதி அமைச்​சகம் சுட்​டிக்​காட்​டி​யுள்​ளது. ‘வரும் ஆண்​டு​களில் இந்​தியா எவற்​றுக்​கெல்​லாம் பாது​காப்பு வளை​யங்​களை உரு​வாக்க வேண்​டுமோ, அந்​தப் பட்​டியலில் தண்​ணீர் முதலிடத்​தில் இருக்​கக்​கூடும்’ என்று நிதி​யமைச்​சகம் தனது ஜூன்​ மாத பொருளா​தா​ர ஆய்​வறிக்​கை​யில்​ தெரி​வித்​துள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version