Home தேசிய செய்திகள் திரிணமூல் காங். எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீச்சு: போலீஸார் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு

திரிணமூல் காங். எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீச்சு: போலீஸார் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு

0

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத் தைத்தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்தனர் என்று மஹுவா மொய்த்ரா குற்றச் சாட்டு தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப் பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத் தது. இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 60-க்கும் மேற்பட்டோர் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சட்டப்பேரவையில் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் மக்கள் வையில் உள்ள 28 திரிணமூல் எம்.பி.க்களில் 20 பேர், இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் (எஸ்சிபிஐ) இணைந்து பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாங்கள்தான் உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என மம்தா அணியினர் போராடி வருகின்றனர். இது தொடர்பாக மக்களவை செயலரிடமும், தேர்தல் ஆணையத்திடமும் அவர்கள் புகார் கடிதங்களைக் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா தனது தொகுதியில் உள்ள அலுவலகத்துக்கு வெளியே நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், மொய்த்ரா மீது முட்டை, கற்களை வீசித்தாக்கினர்.

இதுதொடர்பாக மேற்கு வங்க போலீஸ் டிஜிபி சித்நாத் குப்தாவிடம் மஹுவா மொய்த்ரா புகார் கொடுத்துள்ளார். அதில், “என்னுடைய தொகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் மீது சிலர் முட்டை, கற்களை வீசித் தாக் கினர். இதில் நான் காயமடைந் தேன். அங்கிருந்த போலீஸார் இதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். தாக்குதலில் ஈடுபட்டது பாஜக தொண்டர்கள்தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version