இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கடந்த வாரம் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
2-வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டு நகரில் பகலிரவாக நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக 2 நாட்கள் கொண்ட பகலிரவு பறிற்சி போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று காலை 9.10 மணிக்கு தொடங்குகிறது.
இதற்கிடையே கட்டைவிரல் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷுப்மன் கில், காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். அவர், நேற்று வலைபயிற்சியில் ஈடுபட்டார். இதனால் அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.