வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா – சுவிட்சர்லாந்து இடையே 5 ஒப்பந்தம்

0
22

வர்த்​தகம், முதலீடு, பாது​காப்​பு, அணுசக்​தி, அடிப்படைக் கட்​டமைப்பு வசதி ஆகிய 5 துறை​களில் இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே நேற்று 5 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்தாயின.

சு​விட்​சர்​லாந்து நாட்​டின் பிரதமர் கய் பார்​மெலின் 3 நாட்​கள் சுற்றுப்​பயண​மாக இந்​தி​யா​வுக்கு நேற்று வருகை தந்​தார். நடப்பாண்​டில் இந்​தி​யா​வுக்கு அவர் மேற்​கொள்​ளும் 2-வது பயணம் இது​வாகும். முன்​ன​தாக கடந்த பிப்​ர​வரி மாதம் டெல்லியில் நடை​பெற்ற செயற்கை நுண்​ணறிவு மாநாட்​டில் கலந்து கொள்​வதற்​காக அவர் இந்​தியா வந்​திருந்​தார்.

இந்​நிலை​யில், நேற்று வந்த அதிபர் கய் பார்​மெலினுக்கு விமான நிலை​யத்​தில் அரசு முறைப்​படி சிறப்​பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன் பின்​னர் டெல்​லி​யில் மகாத்மா காந்தி நினை​விடம் அமைந்​துள்ள ராஜ்​காட்​டுக்கு சென்​றார். அங்கு காந்தி நினை​விடத்​தில் அவர் மலர் தூவி அஞ்​சலி செலுத்​தி​னார். முன்​ன​தாக, மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்கர் சுவிட்​சர்​லாந்து அதிபர் பார்​மெலினை சந்​தித்து இருதரப்பு உறவு​களின் பல்​வேறு அம்​சங்​கள் குறித்து விவா​தித்​தார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்​திர மோடியை, அதிபர் கய் பார்​மெலின், ஹைத​ரா​பாத் இல்​லத்​தில் சந்​தித்​துப் பேசி​னார். இந்​தப் பேச்​சு​வார்த்​தை​யின் முடி​வில் வர்த்​தகம், முதலீடு ஆகியவை தொடர்​பாக இரு நாட்டு உறவு​களை மேம்​படுத்​த​வும், அடுத்த நிலைக்கு அவற்றை எடுத்​துச் செல்​ல​வும் இரு​வரும் உறுதி பூண்டுள்​ள​தாகத் தெரி​வித்​தனர்.

பின்​னர் அதிபர் கய் பார்​மெலின் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: இரு நாடு​களும் தங்​கள் உறவுக்கு அளிக்​கும் முக்கியத்​து​வத்தை வெளிப்​படுத்த இந்​தப் பயணம் ஒரு வாய்ப்பாக அமைந்​துள்​ளது. இந்​தி​யா- சு​விட்​சர்​லாந்து இடையிலான உறவு​கள் ‘பகிர்ந்து கொள்​ளப்​பட்ட ஜனநாயக விழுமி​யங்​கள் மற்​றும் நம்​பிக்​கை, பரஸ்பர மரி​யாதை’ ஆகியவற்றின் அடிப்​படை​யில் அமைந்​துள்​ளன. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, அதிபர் கய் பார்​மெலின் முன்னிலை​யில் வர்த்​தகம், முதலீடு, பாது​காப்​பு, அணுசக்​தி, அடிப்​படைக் கட்​டமைப்பு வசதி ஆகிய 5 துறை​களில் இந்​தி​யா, சுவிட்​சர்லாந்து இடையே நேற்று 5 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தா​யின. இளம் தொழில் வல்​லுநர்​களுக்​கான பரி​மாற்​றத் திட்​டம், போக்குவரத்து தொழில்​நுட்​பங்​கள், போக்​கு​வரத்து அமைப்​பு​கள், உள்​கட்​டமைப்பு மேம்​பாடு ஆகிய​வற்​றில் 2 நாடு​களும் ஒத்​துழைப்பை ஊக்​குவிக்​கு​விப்​ப​தற்​காக இந்த புரிந்​துணர்வு ஒப்பந்தங்​கள் கையெழுத்​தாகி​உள்​ளன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here