கடைசி நாளில் இந்தியா ‘ஏ’ அணியின் வெற்றிக்கு 243 ரன்கள் தேவை

0
46

இந்​தியா ‘ஏ’ – ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி லக்​னோ​வில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி 420 ரன்​களும், இந்​தியா ‘ஏ’ அணி 194 ரன்​களும் எடுத்​தன. 226 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 7.5 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 16 ரன்​கள் எடுத்​தது.

நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி 46.5 ஓவர்​களில் 185 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் நேதன் மெக்​ஸ்​வீனி 149 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 10 பவுண்​டரி​களு​டன் 85 ரன்​களும், ஜோஷ் பிலிப் 48 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 50 ரன்​களும் எடுத்​தனர்.

இந்​தியா ‘ஏ’ அணி தரப்​பில் கர்​னூர் பிரார், மானவ் சுதார் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். முகமது சிராஜ், யாஷ் தாக்​குர் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர்.

இதையடுத்து 412 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​தியா ‘ஏ’ அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 41 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 169 ரன்​கள் எடுத்​தது. நாராயண் ஜெகதீசன் 36 ரன்​களில் டாட் மர்பி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். கே.எல்​.​ராகுல் 92 பந்​துகளில், 9 பவுண்​டரி​களு​டன் 74 ரன்​கள் எடுத்த நிலை​யில் ‘ரிட்​டயர்டு ஹர்ட்’ முறை​யில் வெளி​யேறி​னார். தேவ்​தத் படிக்​கல் 5 ரன்​களில் டாட் மர்பி பந்​தில் போல்​டா​னார்.

சாய் சுதர்​சன் 44 ரன்​களும், மானவ் சுதார் ஒரு ரன்​னும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். கைவசம் 8 விக்​கெட்​கள் இருக்க மேற்​கொண்டு வெற்​றிக்கு 243 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் இன்று கடைசி நாள் ஆட்​டத்தை சந்​திக்​கிறது இந்​தி​யா ‘ஏ’ அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here