Home கன்னியாகுமரி செய்திகள் குமரியில்: கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர்

குமரியில்: கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர்

0

கன்னியாகுமரி மாவட்டத்தில், நீர்வளத்துறை சார்பில் இரணியல் மற்றும் கருங்கல் கிளை கால்வாய் புனரமைப்பு பணிகள் ரூ. 12.50 கோடியிலும், நெய்யாறு கால்வாய் நிரந்தர தடுப்பு சுவர் பணிகள் ரூ. 80 லட்சத்திலும் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இன்று இப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலத்திற்கு முன்பாக அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இவர்களுடன் கோதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆ. வசந்தி, உதவி செயற்பொறியாளர் ம. கிறிஸ்டோபர் ஜோசப் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version