Home சினிமா செய்திகள் “ஒவ்​வொரு படத்​துலயும் கஷ்டப்பட்டு​தான் நடிக்கிறேன்!” – ‘பத்​தா’ வெற்றி விழா​வில் விஜய் சேதுபதி தகவல்

“ஒவ்​வொரு படத்​துலயும் கஷ்டப்பட்டு​தான் நடிக்கிறேன்!” – ‘பத்​தா’ வெற்றி விழா​வில் விஜய் சேதுபதி தகவல்

0

விஜய் சேதுப​தி, லிஜோமோல் ஜோஸ் உள்பட பலர் நடித்​துள்ள ‘பத்​தா’ படத்தை பாலாஜி தரணிதரன் இயக்​கி​யுள்​ளார். சாய் அபயங்​கர் இசையமைத்​துள்ள இப்​படம் அக். 1-ல் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. இதன் வெற்றி விழா சென்​னை​யில் நேற்று நடந்​தது. படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர்.

விஜய் சேதுபதி பேசும்​போது, “சந்​தோஷமா இருந்தா எனக்கு காய்ச்​சல் வரும். இப்ப ரொம்ப சந்​தோஷமா இருக்​கேன். ஒரு கூட்​டத்​தில் நிற்​கும்​போது, அங்​கிருக்​கிற பலர் நம்​மிடம் அன்பு செலுத்​தும்​போதும் வாரி அணைத்​துக் கொள்​ளும்​போதும் நம் வெற்​றியை அவங்க வெற்​றியா கொண்​டாடும்​போதும் இந்த வாழ்க்கை, வரம்​தான் அப்​படினு ஞாபகப்​படுத்​திக்கிட்டே இருக்​கு.

இந்த வெற்​றியை, கொண்​டாட்​டத்தை எங்​களுக்கு அளித்த ரசிகர்​களுக்கு நன்​றி. பாலாஜி தரணிதரனின் படங்​கள் எனக்​குப் பிடிக்​கும். ‘சீதக்​கா​தி’ படத்தில் கமல், அமி​தாப்​பச்​சன், மோகன்​லால் நடிக்​கலாம் என்று அவர் யோசித்​தார்.

பக்​கத்​திலேயே நான் இருக்​கிறேனே என்று வருத்​தப்​பட்​டேன். ஆனா, அந்​தப் படம் திரும்ப எனக்கு வந்​த​போது ரொம்ப சந்​தோஷப்​பட்​டேன். அப்ப ‘96’ படமும் ‘சீதக்​கா​தி’​யும் ஒரே நேரத்​தில் வந்​தது. எது எனது 25-வது படமாக இருக்​கணும் என்று நான் நினைக்​கும்​போது ‘சீதக்​கா​தி’யை தேர்வு செய்​தேன். இப்ப அவர் இயக்​கி​யிருக்​கிற ‘பத்​தா’ வேற மாதிரி கதை.

இந்த மாதிரி படங்​கள்ல நடிக்​கிறது கஷ்டம். நான் ரொம்ப ஈசியா நடிக்​கிறதா எல்​லோரும் சொல்​றாங்க. இல்லை மக்​களே, ரத்​த​வாந்தி மட்​டும்​தான் எடுக்​கலை; ஒவ்​வொரு படத்​துல​யும் கஷ்டப்​பட்​டு​தான் நடிக்​கிறேன். இந்​தப் படத்தை நம்​பிய அட்​லிக்கு நன்​றி. அதுதான் எனக்கு கிடைச்ச பெரிய நம்​பிக்​கை” என்​றார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version