“விமானத்தை மோதி தகர்க்க திட்டமிட்டேன்” – ஓமன் துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி வாக்குமூலம்

0
21

வி​மானத்தை தரை​யில் மோதி தகர்க்க திட்​ட​மிட்டு இருந்​தேன் என்று ஓமன் துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி வாக்​குமூலம் அளித்​துள்​ளார்.

கடந்த 30-ம் தேதி ஐக்​கிய அரபு அமீரகத்​தின் (யுஏஇ) துபா​யில் இருந்து இஸ்​ரேலின் டெல் அவிவ் நகருக்கு 180 பேருடன் புறப்​பட்ட பயணி​கள் விமானத்தை துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி நடு​வானில் கடத்த முயற்சி செய்​தார். இந்த முயற்​சியை இந்​திய பைலட் ஸ்மித் மச்​சார் தனது உயிரைப் பணயம் வைத்து முறியடித்​தார். யுஏஇ போலீ​ஸார், துணை பைலட் ஹமாம் அல் ஹமாமியை கைது செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இதில் பல்​வேறு உண்​மை​கள் வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளன. விமானத்தை கடத்த முயன்ற துணை பைலட் ஹமாமி, யுஏஇ-யில் பிறந்​தார். அவரது தாய் சிரி​யாவை பூர்வி​க​மாகக் கொண்​ட​வர். தந்தை ஓமனை சேர்ந்​தவர். இதனால் ஓமன் குடி​யுரிமையை ஹமாமி பெற்​றார். ஆனால் அவர் தனது இளமைக் காலத்​தின் பெரும் பகு​தியை சிரி​யா​வில் கழித்​தார். அங்கு அவருக்கு அல் – காய்​தா, ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வாத சிந்​தனை​கள் மீது மிகப்​பெரிய ஈர்ப்பு ஏற்​பட்​டது.

பள்​ளிப் படிப்​புக்​குப் பிறகு பிரிட்​டனின் பக்​கிங்​ஹாம்​ஷயர் நியூ பல்​கலைக்​கழகத்​தின் தொலைநிலைப் படிப்​பில் விமான போக்​கு​வரத்து மேலாண்மை படிப்பை நிறைவு செய்​தார். பின்​னர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் விமானிக்​கான பயிற்​சியை பெற்​றார். பின்​னர் ஓமன் அரசின் ஓமன் ஏர் விமான நிறு​வனத்​தில் பைலட்​டாக பணி​யில் சேர்ந்​தார். ஆனால் தீவிர​வா​தி​களின் இணை​யதளங்​களில் அவர் ஆர்​வம் காட்​டிய​தால் 2024-ல் பைலட்​டாக பணி​யாற்ற தடை விதிக்​கப்​பட்​டது.

2025 ஜூனில் மொராக்கா அரசின் ராயல் ஏர் மொராக்​கா​வில் பைலட்​டாக பணி​யில் சேர்ந்​தார். கடந்த ஜனவரி​யில் யுஏஇ அரசின் ஃபிளை துபாய் நிறு​வனத்​தில் பைலட்​டாக பணி​யில் சேர்ந்​தார். அவரது சமூக வலைதள பதிவு​களில் அல்-காய்தா தீவிரவாத அமைப்​பின் தலை​வர்​கள், தற்​கொலைப் படை தீவிரவாதி​களின் புகைப்​படங்​கள் இடம்​பெற்று உள்​ளன.

அல் – காய்தா அமைப்​புக்​கும் ஹமாம் அல் ஹமாமிக்​கும் தொடர்பு இருக்​கிறதா என்​பது குறித்து யுஏஐ போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதுகுறித்து யுஏஇ போலீஸ் வட்டாரங்​கள் கூறும்​போது, “சிரி​யா​வில் வாழ்ந்​த​போது ஹமாம் அல் ஹமாமிக்கு தீவிர​வாதம் மீது ஈர்ப்பு ஏற்​பட்டிருக்​கிறது. ஃபிளை துபாய் விமானத்தை தரை​யில் மோதி தகர்க்க திட்​ட​மிட்டிருந்​த​தாக அவர் வாக்​குமூலம் அளித்​துள்​ளார். உயி​ரிழப்பு குறித்து அஞ்​ச​வில்​லை என்​றும்​ கூறி​யிருக்​கிறார்” என்​று தெரிவித்தன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here