“சூரியவன்ஷியை முதல் பந்தில் பவுன்சரில் வீழ்த்துவேன் என்று சொல்லியிருந்தேன்” – பிரஃபுல் ஹிஞ்ச்

0
92

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நேற்று முதல் ஓவரிலேயே அதிரடி இளம்புலி வைபவ் சூரியவன்ஷி உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரஃபுல் பிரகாஷ் ஹிஞ்ச் என்னும் வேகப்பந்து வீச்சாளர் அறிமுக ஐபிஎல் போட்டியிலேயே அசத்தியுள்ளமை பேசுபொருளாகியுள்ளது.

விதர்பாவைச் சேர்ந்தவரான பிரஃபுல் ஹிஞ்ச்சிற்கு வயது 24. ஐபிஎல் தொடரில் அறிமுகப்பந்து வீச்சாளரான இவர் எடுத்த எடுப்பிலேயே சூரியவன்ஷி, ஜெய்ஸ்வால் இறங்கியிருக்கும் போது ஓவர் கொடுக்கப்பட்ட போது உண்மையில் பாவம் அறிமுக பவுலரைப் போய் இந்த அதிரடி புலியிடம் மாட்டி விடுகிறாரே இஷான் கிஷன் என்றுதான் தோன்றியது.

அதுவும் சூரியவன்ஷிக்கு அந்தப் பந்து எழும்பியது அவர் ஒரே சுழற்று சுழற்றினார் பந்து மேலேறியது அரோரா கேட்சைப் பிடித்தார். சரி சூரியவன்ஷிக்கு ஒரு மேட்ச் இப்படி ஆகும் என்று பார்த்தால் அதே ஓவரில் 4வது பந்து அவ்வளவு பெரிய பந்து இல்லை என்றாலும் துருவ் ஜுரெல் அதை ஆடப்போய் ஸ்டம்பிற்குள் வாங்கி விட்டுக் கொண்டார்.

அடுத்து 6வது பந்தில் லுவான் ட்ரி பிரிட்டோரியஸ் என்னும் அதிரடி வீரரையும் டீப்பில் கேட்ச் எடுக்க வீட்டுக்கு அனுப்பி ஒரே ஓவரில் அறிமுக ஐபிஎல் போட்டியில் 3 விக்கெட்டுகளைச் சாய்த்ததோடு கடைசியில் தன் அடுத்த ஓவரில் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்கையும் வீட்டுக்கு அனுப்பினார். 4/34 என்பது நேற்று பிரஃபுல் ஹிஞ்சின் அனாலிசிஸ் ஆகும். இதற்காக ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

ஆட்ட நாயகன் விருது கிடைத்தவுடனேயே அவர் கூறும்போது, “நான் கடந்த ஆண்டே இதை எழுதி வைத்தேன் என்று நினைக்கிறேன் முதல் போட்டியில் 4-5 விக்கெட்டுகளை எடுப்பேன் என்று.” என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.

அவர் மேலும் கூறும்போது, “நான் 13 வயதில் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தேன், கிரிக்கெட் பந்து என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் என் தந்தையிடம் கிளப்பில் சேர்த்துவிடுமாறு கேட்டேன் அவரும் உடனே செவிமடுத்தார். அப்படித்தான் ஆரம்பித்தது எல்லாம், என் இந்த ஆட்ட நாயகன் விருதை குடும்பத்திற்கு அர்ப்பணிக்கிறேன்.

வைபவ் சூரியவன்ஷியை பவுன்சரில் வீழ்த்துவேன் என்று சிலரிடம் நான் கூறினேன். அவரை முதல் பந்திலேயே வீழ்த்த வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதுதான் திட்டம். பந்து வீச்சு பயிற்சியாளர் வருண் ஆரோன் எனக்கு நிறைய இதில் உதவிபுரிந்தார்.” என்றார்.

கடந்த அக்டோபர் 2024- விதர்பாவுக்காக முதல்தர கிரிக்கெட்டின் முதல் போட்டியில் ஆடினார். கடந்த ரஞ்சி சீசனில் 11 இன்னிங்ஸ்களில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சையத் முஷ்டாக் அலி டிராபியில் 2025-ல் ஆந்திராவுக்கு எதிராக டி20 முதல் போட்டியில் 1/23 என்று டைட்டாக வீசினார்.

இவர் தனது ஆதர்சமாக சன் ரைசர்ஸின் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கமின்ஸையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவையும் குறிப்பிட்டுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here