நாகர்கோவில் திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நான் முதல்வன் திட்டத்தில் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி முகாம் 5 நாட்கள் நடந்தது. இதில் தென்னையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, தேங்காய் பாலில் இருந்து பர்பி, சாக்லேட், லட்டு போன்ற தயாரிப்பது, ஜெல்லி தயாரித்தல், இளநீர் பானம், இளநீர் பாயாசம் தயாரிப்பது போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று (ஜூலை 1) நடந்தது. இதில் கலெக்டர் அழகு மீனா காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘இந்த பயிற்சி வாயிலாக இளைஞர்கள் கற்றுக்கொண்ட புதிய தொழில்நுட்பங்கள் மூலம் சுயத்தொழில் செய்து வருமானம் பெருக்க வேண்டும்’ என்றார். நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், விஞ்ஞானிகள் செல்வி, கவிதா, லதா, செல்வராணி, பயிற்சியாளர்கள், பயிற்றுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.