பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர் இப்போது ‘வார் 2′ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இன்னொரு ஹீரோவாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார். கியாரா அத்வானி உட்பட பலர் நடிக்கின்றனர். அயன் முகர்ஜி இயக்கும் இந்தப் படம் யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் தொடர்ச்சியாக உருவாகிறது. இந்தப் படத்துக்கான நடனக்காட்சியை மும்பையில் படமாக்க இருந்தனர். ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் என்.டி.ஆரும் இதில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான ஒத்திகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஹிருத்திக் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதில் அவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பரிசோதித்த மருத்துவர்கள் 4 வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest article
குமரி: மருந்து சேமிப்பு கிடங்கியினை கலெக்டர் பார்வை
மார்த்தாண்டம் பகுதியில் கல்குளம் விளவங்கோடு தாலுகா கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் முதல்வர் மருந்தக மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா நேற்று 22ம் தேதி நேரில்...
குமரி: வாலிபர் கொலை ; ஒருவர் கோர்ட்டில் சரண்
சூரியகோடு பகுதியைச் சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் சதீஷ்குமார் (39) நடைக்காவு பகுதியில் 5 பேர் கொண்ட கும்பலால் சிமெண்ட் கல்லால் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். கொல்லங்கோடு போலீசார்...
குமரி: பஸ் இருக்கையில் இறந்த நிலையில் டிரைவர்
கன்னியாகுமாரி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து ஓட்டுநர் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தாணு பிள்ளை (62) நேற்று படந்தாலுமூடு பகுதியில் பேருந்து நிறுத்தும் இடத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 108...














