Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவிலில் பள்ளி மாணவிகளுக்கு HPV தடுப்பூசி விழிப்புணர்வு கருத்தரங்கம்!

நாகர்கோவிலில் பள்ளி மாணவிகளுக்கு HPV தடுப்பூசி விழிப்புணர்வு கருத்தரங்கம்!

0
நாகர்கோவில் மாநகராட்சியில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான HPV தடுப்பூசி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான HPV தடுப்பூசி விழிப்புணர்வு கருத்தரங்கம் வட்டவிளை மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது. மேயர் மேரி பிரின்சி லதா தலைமையில், மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா IAS முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் IAS சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்காக HPV தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வட்டவிளை மாநகராட்சி கலையரங்கில் வைத்து நடைபெற்றது…
நாகர்கோவில் மாநகராட்சி மாண்புமிகு மேயர் மேரி பிரின்சி லதா அவர்கள் தலைமையில் ஆணையர் மரியாதைக்குரிய ஐஸ்வர்யா IAS அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய பிரதாப் IAS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்….
கருத்தரங்கில் HPV தடுப்பூசியின் முக்கியத்துவம், கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயை தடுப்பதில் தடுப்பூசியின் பங்கு, தடுப்பூசியின் பயன்கள், மேலும் பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது…
பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது…
தகுதியான குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின்படி HPV தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெற்றோர்கள் முன்வர வேண்டும் என நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது…
கருத்தரங்கில் மாவட்ட சுகாதார அலுவலர் திரு.நமச்சிவாயம், மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி ஆணையர் திரு.டில்லி, மருத்துவக் கல்லூரி முதல்வர், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version