Home சினிமா செய்திகள் யுவன் இசையில் ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ முதல் சிங்கிள் எப்படி?

யுவன் இசையில் ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ முதல் சிங்கிள் எப்படி?

0

யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிளை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

‘கொஞ்சி கொஞ்சி’ எனத் தொடங்கும் பாடலை விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதியுள்ளார், யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். மனதை வருடும் இசையுடன் தொடங்கும் பாடலில், யுவனின் குரல் ஒலிக்கத் தொடங்கியதும், அது நம் காதுகளையும் மனதையும் யுவனின் பழைய இசை உலகத்துக்குள் வழிநடத்தி செல்கிறது.

இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரனின் மகன் ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ படத்தில், சோனா ஒலிக்கல் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

வெங்கட் பிரபுவின் கதையில் உருவாகும் இந்தப் படத்தை ‘குடும்பஸ்தன்’ படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் என் சுப்ரமணியம் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

படத்தில் சுதா கொங்கரா க்ரியேட்டிவ் புரொடியுஸராக பணியாற்றுகிறார். ரமணன் பாலகங்காதரன் தயாரிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவை சாய் முனிஷும், படத்தொகுப்பை ஸ்ரீவட்சனும் மேற்கொள்கின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version