Home சினிமா செய்திகள் விக்ரம் பிரபுவின் ‘சிட்டி ஆஃப் கோல்டு’ மூலம் நடிகையாக அறிமுகம் ஆகும் அமலா ஷாஜி

விக்ரம் பிரபுவின் ‘சிட்டி ஆஃப் கோல்டு’ மூலம் நடிகையாக அறிமுகம் ஆகும் அமலா ஷாஜி

0

நடிகர் விக்ரம் பிரபுவின் 26-வது திரைப்படத்துக்கு ‘சிட்டி ஆஃப் கோல்டு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்கும் இப்படத்தில், இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா ஷாஜி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, தங்கம் கடத்தல் மற்றும் கோவை நகரை மையமாகக் கொண்ட குற்றப் பின்னணி சார்ந்த கதையை பேசுகிறது. யு1 ரெக்கார்ட்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், ஷிவாத்மிகா ராஜசேகரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

“நமது கையில் இருக்கும் ஒரு கிராம் தங்கம், ஒருத்தன் உயிரையாவது எடுத்துவிட்டுதான் கைக்கு வந்திருக்கும்” என்ற விக்ரம் பிரபுவின் வசனம் கவனிக்க வைக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்துக்கு கார்த்திக் ஷராஜ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version