வங்கதேசத்தில் 5 இந்து குடும்பங்களின் வீடுகள் எரிப்பு

0
16

வங்​கதேசத்​தில் பிரோஜ்பூர் பகு​தி​யில் 5 இந்து குடும்பங்களின் வீடு​கள் நள்​ளிர​வில் தீ வைத்து எரிக்​கப்​பட்​டன.

வங்​கதேசத்​தில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது. இதன்​ பிறகு அந்த நாட்​டில் வசிக்​கும் இந்​துக்​கள் மீதான தாக்​குதல்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இது​வரை சுமார் 2,500-க்​கும் மேற்​பட்ட தாக்​குதல்​கள் நடை​பெற்​றுள்​ளன. சுமார் 150-க்​கும் மேற்​பட்ட இந்து கோயில்​கள் இடிக்​கப்​பட்டு உள்​ளன. சுமார் 25 இந்​துக்​கள் கொலை செய்​யப்​பட்டு உள்​ளனர்.

இந்த சூழலில் வங்​கதேச மாணவர் அமைப்​பின் மூத்த தலை​வர் ஷெரீப் உஸ்​மான் ஹாடி மீது கடந்த 12-ம் தேதி டாக்​கா​வில் துப்பாக்​கிச்​சூடு நடத்​தப்​பட்​டது. மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 18-ம் தேதி உயி​ரிழந்​தார். இதன் பின்​னணி​யில் இந்​தியா இருப்​ப​தாக​ வங்​கதேச சமூக ஊடகங்களில் தகவல்​கள் பரவி வரு​கின்​றன. இதை இந்​திய பாதுகாப்புப் படைகள் திட்டவட்டமாக மறுத்​துள்​ளன. ஹாடி கொலைக்​குப் பிறகு வங்கதேசத்​தில் இந்​துக்​கள் மீதான தாக்குதல்கள் அதி​கரித்து வருகின்​றன.

கடந்த 18-ம் தேதி வங்​கதேசத்​தின் மைமன்​சிங் பகு​தியைச் சேர்ந்த இந்து இளைஞர் தீபு சந்​திர தாஸ் ஒரு கும்​பலால் அடித்து கொல்​லப்​பட்​டு, எரிக்​கப்​பட்​டார். இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி ராஜ்​பாரி பகு​தி​யில் இந்து இளைஞர் அம்​ரித் மண்​டல் அடித்துக் கொல்​லப்​பட்​டார். இந்த சூழலில் வங்​கதேசத்​தின் பிரோஜ்பூர் மாவட்​டம், தும்​ரி​தாலா கிராமத்​தில் 5 இந்து குடும்​பங்​களின் வீடுகள் நேற்று நள்​ளிர​வில் தீ வைத்து எரிக்​கப்​பட்​டன.

திடீரென தீப்​பிடித்து எரிவதைப் பார்த்த 5 குடும்​பத்​தினரும் வீடு​களை விட்டு வெளி​யேற முயற்சி செய்​தனர். ஆனால் வீடு​களின் வெளியே பூட்டு போடப்​பட்டு இருந்​தது. இதைத் தொடர்ந்து கதவுகளை உடைத்து 5 குடும்​பத்​தினரும் உயிர் தப்​பினர். எனினும் அவர்​களது வீடு​கள், உடைமை​கள் தீயில் முற்​றி​லு​மாக எரிந்து நாச​மாகின. இதுதொடர்​பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரு​கிறது. உள்​ளூர் போலீ​ஸார் விசாரணை நடத்தி சந்​தேகத்​தின்​பேரில் 5 பேரை கைது செய்து உள்​ளனர்.

தாரிக் ரஹ்​மான் வேட்​புமனு தாக்​கல்: வங்​கதேசத்​தில் வரும் பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. வங்கதேச தேசி​ய​வாத கட்சி (பிஎன்​பி), மாணவர் சங்​கங்​கள் உருவாக்கிய தேசிய மக்​கள் கட்சி (என்​சிபி), ஜமாத்-இ–இஸ்​லாமி ஆகியவை தேர்​தல் களத்​தில் உள்​ளன.

முன்​னாள் பிரதமர் கலீதா ஜியா​வின் மகனும் பிஎன்பி கட்​சி​யின் செயல் தலை​வரு​மான தாரிக் ரஹ்​மான் 17 ஆண்​டு​களுக்கு பிறகு கடந்த 25ம் தேதி தாய் ​நாட்​டுக்கு திரும்​பி​னார். அவர் சார்​பில் டாக்கா 17, போகுரா 6 ஆகிய இரு தொகு​தி​களில் நேற்று வேட்பு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. பிஎன்பி கட்​சி​யின் பிரதமர் வேட்​பாள​ராக அவர் முன்​னிறுத்​தப்​பட்டு உள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here