ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஹோலிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கலர் பொடிகளை ஒருவருக்கொருவர் முகத்தில் தடவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.














