வேளச்சேரி – பரங்கிமலை தடத்தில் பாதுகாப்பு ஆணையர் நடத்திய அதிவேக சோதனை ஓட்டம் வெற்றி

0
10

வேளச்சேரி – பரங்​கிமலை பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில் ரயில்வே பாது​காப்பு தலைமை ஆணை​யர் ஜனக் குமார் கர்க் அதிவேக ஏசி மின்​சார ரயில் மூல​மாகசோதனை ஓட்​டத்தை மேற்​கொண்​டார். இது வெற்​றிகர​மாக நிறைவடைந்​த​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

சென்னை கடற்​கரை – வேளச்சேரி பறக்​கும் ரயில் (மேம்​பால ரயில் வழித்​தடம்) தடத்தை பரங்​கிமலை வரை 5 கி.மீ. தொலை​வுக்கு நீட்​டிக்​கும் பணி 17 ஆண்​டு​களுக்​குப் பிறகு நிறைவடைந்​துள்​ளது.

இதையடுத்​து, இத்​தடத்​தில் கடந்த ஆண்டு நவ.7, டிச.15 ஆகிய தேதி​களில் அடுத்​தடுத்து சரக்கு ரயில்​கள் இயக்கி சோதிக்​கப்​பட்​டன. இது தொடர்​பாக, ர​யில்வே பாது​காப்பு ஆணை​யருக்கு அறிக்கை சமர்ப்​பிக்​கப்​பட்​டது. பின்​னர், அவரது பரிந்​துரைகளை ஏற்​று, திருத்​தம் செய்து மீண்​டும் அறிக்கை அனுப்​பப்​பட்​டது.

இதற்​கிடை​யில், வேளச்சேரி – பரங்​கிமலை ரயில் வழித்​தடத்​தில் மார்ச் 10-ம் தேதி மின்​சார ரயில் சேவை தொடங்​கப்​படும் என்று தெற்கு ரயில்வே அறி​வித்​தது. இந்​நிலை​யில், வேளச்சேரி – பரங்​கிமலை ரயில் வழித்​தடத்​தில் ரயில்வே பாது​காப்பு தலைமை ஆணை​யர் ஜனக் குமார் கர்க் நேற்று ஆய்வு செய்​தார்.

ஆய்​வின் ஒரு பகு​தி​யாக, பரங்​கிமலை முதல் வேளச்சேரி வரை மோட்​டார் டிராலி மூலம் விரி​வான சோதனை நடத்​தப்​பட்​டது. இதில் தண்​ட​வாள அமைப்​பு, ஜல்​லிகளின் அளவு, சமன்​பாடு, பயணத் தரம் ஆகியவை ஆராயப்​பட்​டன. மேலும் மேம்​பாலக்கட்​டமைப்​பு​கள், மின்​சார வழித்​தடங்​கள், சிக்​னல் மற்​றும் இன்​டர்​லாக்​கிங் அமைப்​பு​கள் உள்​ளிட்ட பாது​காப்பு வசதி​களை ஆணை​யர் ஆய்வு செய்​தார்.

இதைத் தொடர்ந்து 9 பெட்​டிகளைக் கொண்ட ஏசி மின்​சார ரயி​லில் அதிவேக சோதனை ஓட்​டம் நடத்​தப்​பட்​டது. இயக்க நிலைகளில் ரயி​லின் அதிர்​வுத் தன்​மை​கள், பிரேக் பிடிக்​கும் திறன், தண்​ட​வாளத்​தின்வடி​வியல் (track geometry), சிக்​னல்​களின் தெரிவுநிலை ஆகிய​வற்றை சோதிக்​கப்​பட்​டன.

புழு​தி​வாக்​கம், ஆதம்​பாக்​கம் புழு​தி​வாக்​கம், ஆதம்​பாக்​கத்​தில் புதி​தாகக் கட்​டப்​பட்​டுள்ள ரயில் நிலை​யங்​களில் கட்​டமைப்பு உறு​தித்​தன்​மை, பயணி​கள் நடமாடும் வசதி மற்​றும் அணுகல் அம்​சங்​கள் குறித்​தும் ஆய்வு செய்​யப்​பட்​டன.

சோதனை ஓட்​டம் வெற்​றிகர​மாக நிறைவடைந்​த​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர். ஆய்​வின்​போது, சென்னை ரயில்வே கோட்ட மேலா​ளர் சைலேந்​திர சிங், கூடு​தல் கோட்டமேலா​ளர் தேஜ் பர்த்​தாப் சிங், முதன்மை நிர்​வாக அதி​காரி (கட்​டு​மானம்) எஸ்​.கே.மவுரி​யா உட்​பட பலர்​ உடனிருந்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here