அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து ஐகோர்ட் உத்தரவு

0
14

அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோபி செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றார். தற்போது வருவாய்த்துறை அமைச்சராக உள்ள செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், செங்கோட்டையனின் வேட்பு மனுவில் சான்றளித்துள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்த வேட்பு மனுவை ஏற்றதே தவறு எனக் கூறியிருந்தார். இதேபோல், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையன் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக ஒத்திவைத்தார். இன்று இந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here