Home மாநில செய்திகள் காய்ச்சல் காரணமாக சுகாதாரத் துறை அமைச்சர் அப்போலோவில் அனுமதி

காய்ச்சல் காரணமாக சுகாதாரத் துறை அமைச்சர் அப்போலோவில் அனுமதி

0

சுகாதாரத் துறை மா.சுப்பிரமணியன். கடந்த 22-ம் தேதி காய்ச்சல் காரணமாக, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதியானார். அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்தனர்.

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், நேற்று காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

அவரது உடல்நிலையைப் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version