Home உலக செய்திகள் உலகளாவிய மைக்ரோசாஃப்ட் சேவை படிப்படியாக சீராகிறது: சில பயனர்களுக்கு இடையூறு நீடிக்கலாம்

உலகளாவிய மைக்ரோசாஃப்ட் சேவை படிப்படியாக சீராகிறது: சில பயனர்களுக்கு இடையூறு நீடிக்கலாம்

0

உல​களவில் சுமார் 15 மணி நேரத்​திற்​கும் மேலாக நீடித்த சேவை முடக்​கத்​திற்​குப் பிறகு, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை​ய​வழிச் சேவை​கள் படிப்​படி​யாகச் சீரடைந்து வரு​வ​தாக அந்​நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

இது குறித்து மைக்​ரோசாஃப்ட் நிறு​வனத்​தின் செயல் துணைத் தலை​வர் சார்​லஸ் லமன்னா எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “உல​களவில் மைக்​ரோசாஃப்ட் சேவை​கள் படிப்​படி​யாக சீரடைந்து வரு​கின்​றன. ஆசிய-பசி​பிக் பிராந்​தி​யத்​தின் பல பகுதிகளில் மீட்​புப் பணிகள் முழு​மையடைந்​துள்​ளன. தரவுப் போக்​கு​வரத்து படிப்​படி​யாகச் சீர்​செய்​யப்​பட்டு வரு​கிறது.

இமெயில் கணக்​கு​களை அணுகு​வது மற்​றும் மின்​னஞ்​சல்​கள் அனுப்​பப்​படுவது உள்​ளிட்ட முக்​கியச் சேவை​களில் நல்ல முன்​னேற்​றம் காணப்​படு​கிறது. இருப்​பினும், சில பயனர்​களுக்​குத் தொடர்ந்து அவ்​வப்​போது சிறிய இடையூறுகள் ஏற்​பட வாய்ப்புள்ளது.

எங்​களுக்​குக் கிடைக்​கும் கூடுதல் தகவல்​களைத் தொடர்ந்து பகிர்வோம். தற்​போதைய நில​வரப்​படி, இது விஷமத்​தனமான அல்​லது சைபர் தாக்​குதல் நட​வடிக்​கைகளால் ஏற்​பட்​டதற்​கான எந்த அறிகுறியும் இல்லை என்​பதை என்​னால் உறுதிப்​படுத்த முடியும்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version