வங்கதேசத் தேர்தலில் பிஎன்பி கட்சி மூத்த தலைவரும், இந்து மதத்தைச் சேர்ந்தவருமான காயேஷ்வர் சந்திர ராய் போட்டியிட்டார். டாக்கா-3 தொகுதியில் போட்டியிட்ட அவர் மொத்தம் 99,163 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் வங்கதேச முன்னாள் அமைச்சர் ஆவார்.
வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடைபெற்று வரும் வேளையில், சிறுபான்மையினராக இருக்கும் இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர் தலைநகர் டாக்காவில் உள்ள தொகுதியில் வெற்றி பெற்றிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் கிருஷ்ணா நந்தி என்ற வேட்பாளர் இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆனால், தேர்தலில் தோல்வி அடைந்தார்.








