டி20 அணியின் பயிற்சியாளராக கங்குலி நியமனம்

0
84

ஐபிஎல் தொடரை போன்று தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 4-வது சீசன் வரும் டிசம்பர் 26-ல் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சீசனில் கிரஹாம் ஃபோர்டு நீக்கப்பட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜோனாதன் டிரோட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அணியின் செயல்திறனில் எதிர்பார்த்த அளவிலான முன்னேற்றம் இல்லாததால் தற்போது அவர், நீக்கப்பட்டு தலைமை பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான ஷான் பொல்லாக் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here