Home விளையாட்டு செய்திகள் பி.வி.சிந்து வெற்றி முதல் கில் தரநிலை வரை – விளையாட்டுத் துளிகள்

பி.வி.சிந்து வெற்றி முதல் கில் தரநிலை வரை – விளையாட்டுத் துளிகள்

0

சீனா ஓபன் பாட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-14, 9-21, 21-10 என்ற செட் கணக்கில் போராடி சகநாட்டைச் சேர்ந்த உனதி ஹூடாவை வீழ்த்தினார்.

ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 17-21, 21-5, 21-17 என்ற செட் கணக்கில் 11-ம் நிலை வீரரான இந்தோனேஷியாவின் அல்வி ஃபர்ஹானை தோற்கடித்தார்.

* மஸ்கட்டில் நடைபெற்று வரும் இளையோருக்கான ஹாக்கி 5 ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 14-0 என்ற கணக்கில் ஓமனையும், 7-4 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் வீழ்த்தியது.

* ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹஸ்மதுல்லா சாஹிதி விலகிய நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணியின் புதிய கேப்டனாக ரஹ்மத் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

* ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 801 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூஸிலாந்தின் டேரில் மிட்செல் 802 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளனர். விராட் கோலி 767 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ரோஹித் சர்மா 758 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version