வெள்ளமோடியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்த அஷ்ரத் அலி (21) மற்றும் அஜேஷ் (21) ஆகியோர், சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு திரும்பும்போது, வெள்ளமோடி சந்திப்பு பகுதியில் பள்ளிப் பேருந்து ஒன்று மோதியதில் உயிரிழந்தனர். வெள்ளிச்சந்தை போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














