குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா சார்பில் போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி வெள்ளிசந்தையில் நேற்று நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார் போட்டியை துவக்கி வைத்தார். 18 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்ற இப்போட்டியில், ஹரிஷி முதல் பரிசையும், அஸ்வின் இரண்டாம் பரிசையும், சச்சின் மூன்றாம் பரிசையும், பவித் நான்காம் பரிசையும் வென்றனர். அண்ணாமலை பல்கலைக்கழக அலுவலர் ஹரிஹரசுதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார்.