போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காக கனடாவைச் சேர்ந்த 4 பேருக்கு சீனாவில் மரண தண்டனை

0
131

நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காக கனடாவைச் சேர்ந்த 4 பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்து கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறுகையில், “ கனடாவைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த விவகாரத்தில் நான் ஏற்கெனவே தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரினேன். ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட 4 பேரும் இரட்டை குடியுரிமை வைத்திருப்பவர்கள். வெளிநாட்டில் மரணை தண்டனையை எதிர்கொள்ளும் கனடியர்களுக்கு கனடா தொடர்ந்து கருணையை கோரி வருகிறது. நான்கு நபர்களின் அடையாள விவரங்களை மறைக்குமாறு அவர்களது குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்” என்றார்.

இதனிடையே ஒட்டாவாவில் உளள சீன தூதரகம் கூறுகையில், “ போதைப்பொருள் குற்றத்துக்காக மட்டுமே அந்த நான்கு கனடியர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேலும் சீனா, இரட்டை குடியுரிமையை அங்கீகரிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here