பரோலில் தப்​பிய முன்​னாள் ராணுவ வீரர்: 20 ஆண்​டு​களுக்கு பிறகு கைது

0
210

ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பரோலில் தப்பிச் சென்றார். 20 ஆண்டுகளுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம் சிதி கிராமத்தை சேர்ந்தவர் அனில் குமார் திவாரி (58). ராணுவத்தில் டிரைவராக பணியாற்றி வந்த இவர் கடந்த 1989-ல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அவரது உடலுக்கு தீவைத்தார். இதையடுத்து மனைவி தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடினார். எனினும் உண்மை வெளிப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

இவர் கடந்த 2005-ல் 2 வார பரோல் காலத்தில் தப்பிச் சென்று தலைமறைவானார். இந்நிலையில் அவரை 20 ஆண்டுகளுக்கு அவரது சொந்த கிராமத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “இவர் செல்போன் பயன்படுத்த மாட்டார். வேலை செய்யும் இடம் மற்றும் வசிப்பிடத்தை தொடர்ந்து மாற்றி வந்தார். தலைமறைவு காலத்தில் 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் இதன் மூலம் 4 குழந்தைகள் இருப்பதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்” என்று தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here