முன்னாள் கூடுதல் டிஜிபி டி.ராதாகிருஷ்ணன் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

0
16

தூத்​துக்​குடி மாவட்​டம், கோவில்​பட்​டியைச் சேர்ந்​தவர் டி.​ரா​தாகிருஷ்ணன் (73). இவர் கடந்த 1981-ல் தமிழக கேடரில் ஐபிஎஸ் ஆனார். மதுரை காவல் ஆணை​யர், சென்னை இணை ஆணை​யர் உட்பட பல்​வேறு பொறுப்​பு​களில் பணி​யாற்​றி​னார். பின்​னர் கூடு​தல் டிஜிபி​யாக பணி ஓய்வு பெற்று சென்​னையை அடுத்த பனையூரில் குடும்​பத்​துடன் வசித்து வந்​தார்.

இந்​நிலை​யில், அவர் உடல் நலக்​குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு குடும்​பத்​தினர், நண்​பர்​கள், போலீஸ் அதி​காரி​கள் நேரில் அஞ்​சலி செலுத்​தினர். அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்​தில் இன்று எரியூட்​டப்​படு​கிறது.

முதல்​வர் இரங்​கல்: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள இரங்கல் செய்​தியில், டி.​ரா​தாகிருஷ்ணன் மறைந்த செய்​தி​யறிந்து வருத்​த​முற்​றேன். நான் சென்னை மேய​ராக இருந்த காலத்​தில் சென்னை காவல் இணை ஆணை​ய​ராக பணி​யாற்​றி​னார்.

பல்​வேறு பொறுப்​பு​களில் சட்​டம்​-ஒழுங்கை திறம்பட கையாண்​டிருக்​கிறார். அவரை இழந்து தவிக்​கும் அவரது குடும்​பத்​தினர், காவல் துறை நண்​பர்​களுக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக்​கொள்​கிறேன்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here