கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புகழ்பெற்ற தேவாலயங்களில் ஒன்றான கேட்டவரம் தரும் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தின் 1-ம் திருவிழாவான கொடியேற்று நிகழ்ச்சி நேற்று (நவம்பர் 24) கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஏராளமான இந்து மக்கள் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வான வேடிக்கையும் நடைபெற்றது.














