Home சினிமா செய்திகள் அமீரின் ‘மாகாளி’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

அமீரின் ‘மாகாளி’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

0

அமீர் நடிப்பில் உருவாகி வரும் ‘மாகாளி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மாரி செல்வராஜிடம் உதவியாளராக இருந்த எஸ்​.பி. அரவிந்த் இயக்​குந​ராக அறி​முகமாகும் இந்தப் படத்தில் அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், அனிஷ்மா அனில்குமார், ஹரிஹரன், ராம், லெனின் பாரதி உள்​ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர்.    

இப்​படத்தை ஐங்​கரன் சார்​பாக கே.கருணா​மூர்த்தி – நவ்வி சார்பாக திவ்யா மாரி செல்​வ​ராஜ் மற்​றும் இயக்​குநர் மாரி செல்வராஜ் இணைந்து தயாரிக்​கின்​றனர். 

செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. சுமார் ஒரு மாதம் நடந்து வந்த முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்த தகவலை இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் படக்குழுவினர் கேக் வெட்டும் படத்தைப் பகிர்ந்து, ‘மாகாளி’-யின் முதல்கட்ட படப்பிடிப்பு மகிழ்ச்சியுடன் நிறைவடைந்தது’ என்று தெரிவித்துள்ளார்.

‘மாகாளி’ படத்துக்கு செல்வரத்தினம் பிரதீப் ஒளிப்பதிவு செய்​ய, ஜஸ்​டின் பிர​பாகரன் இசை அமைக்​கிறார். 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version