Home விளையாட்டு செய்திகள் போல் வால்ட்டில் தேசத்துக்கு முதல் பதக்கம்: வரலாறு படைத்த பரணிகா @ ஆசிய விளையாட்டு

போல் வால்ட்டில் தேசத்துக்கு முதல் பதக்கம்: வரலாறு படைத்த பரணிகா @ ஆசிய விளையாட்டு

0

ஜப்பானில் நடைபெறும் நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் போல் வால்ட்டில் வெண்கல பதக்கம் வென்று தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை பரணிகா இளங்கோவன் அசத்தியுள்ளார். இதன் மூலம் போல் வால்ட்டில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

நடப்பு ஆசிய விளையாட்டின் 7-வது நாளான இன்று (செப்.25) பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தடகள விளையாட்டில் போல் வால்ட் விளையாட்டில் மகளிருக்கான இறுதிச் சுற்றில் இந்தியா சார்பில் சிந்துஸ்ரீ மற்றும் பரணிகா இளங்கோவன் பங்கேற்றனர்.

இதில் 4.15 மீட்டர் உயரம் தாண்டிய பரணிகா இளங்கோவன் வெண்கலம் வென்றார். கஜகஸ்தானின் பிலினா இவனோவாவும் 4.15 மீட்டர் உயரம் தாண்டி இருந்தார். இதனால் இருவரும் பதக்கத்தை பகிர்ந்து கொண்டனர். இதில் தங்கத்தை ஜப்பான் வீராங்கனையும், வெள்ளியை சீன வீராங்கனையும் வென்றனர்.

முதல்வர் விஜய் வாழ்த்து

“ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், கோல் ஊன்றித் தாண்டும் (Pole Vault) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இவ்வெற்றியைப் பெற்றுள்ள அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசின் சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அவரது வெற்றி, இலக்கை நோக்கி அயராது உழைக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கும். பரணிகா இளங்கோவன் தொடர்ந்து பல உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்” என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version