நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகர்கோவில் இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














