அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு திமுகவின் முக்கிய அமைச்சர்கள் போட்டியிடும் 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் சிவசங்கரின் குன்னம் தொகுதி ஐ.ஜே.கே.வுக்கும், சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம், முத்துசாமியின் ஈரோடு மேற்கு, காந்தியின் ராணிப்பேட்டை தொகுதிகள் த.மா.கா.வுக்கும், அமைச்சர்கள் சுப்பிரமணியனின் சைதாப்பேட்டை, டி.ஆர்.பி.ராஜாவின் மன்னார்குடி தொகுதிகள் அ.ம.மு.க.வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பெரியகருப்பனின் திருப்பத்தூர், அனிதா ராதாகிருஷ்ணனின் திருச்செந்தூர், மனோ தங்கராஜின் பத்மநாபபுரம், நாசரின் ஆவடி, வேலுவின் திருவண்ணாமலை, அப்பாவுவின் ராதாபுரம் தொகுதியும் பா.ஜ.க.வுக்கு தரப்பட்டுள்ளன.














