3-வது டி20-ல் இங்கிலாந்து வெற்றி

0
21

 ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பனில் நேற்று நடைபெற்றது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியானது ஜேமி ஓவர்டனின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16.5 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக சாம் ஹார்ப்பர் 26, ஜேக் பிரேசர் மெக்கர்க் 22, மிட்செல் ஓவன் 17, கேப்டன் மிட்செல் மார்ஷ் 11 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேமி ஓவர்டன் 4 ஓவர்களை வீசி, ஒரு மெய்டனுடன் 12 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். லியாம் டாவ்சன் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

109 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி பேட் செய்த நிலையில் மழை காரணமாக இரு முறை ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் 16 ஓவர்களில் 93 ரன்கள் சேர்க்க வேண்டுமென இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 8.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றிப் பெற்றது.

ஜோர்டான் காக்ஸ் 33, அனியூரின் டொனால்ட் 32 ரன்கள் சேர்த்தனர். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here