Home தேசிய செய்திகள் அக்.23-ல் ஆஜராக பினராயிக்கு அமலாக்கத் துறை சம்மன்

அக்.23-ல் ஆஜராக பினராயிக்கு அமலாக்கத் துறை சம்மன்

0

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்கு சொந்தமான, தற்போது செயல்பாட்டில் இல்லாத எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு, தகவல் தொழில்நுட்ப ஆலோசனைச் சேவைகளுக்கான கட்டணம் என்ற பெயரில் சிஎம்ஆர்எல் நிறுவனம் ரூ.2.78 கோடியை முறைகேடாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவகாரத்தில், கேரள லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு, கடந்த 12-ம் தேதி பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகனும், முன்னாள் அமைச்சருமான பி.ஏ. முகமது ரியாஸ் ஆகியோருக்கு எதிராக 2 முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்தது.

இந்நிலையில், பினராயி விஜயனுக்கு வரும் 23-ம் தேதி கொச்சி அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version