செல்சி அணியில் இணைந்தார் எமிலியானோ மார்ட்டினெஸ்

0
10

அர்​ஜெண்டினா கால்​பந்து அணி​யின் நட்​சத்​திர கோல்​கீப்​பர் எமிலி​யானோ மார்ட்​டினெஸை இங்​கிலாந்​தின் முன்​னணி கிளப் அணி​யான செல்சி ஒப்​பந்​தம் செய்​துள்​ளது.

2022-ம் உலகக் கோப்பை கால்​பந்து சாம்​பிய​னான அர்​ஜெண்​டினா அணி​யின் 33 வயதாகும் கோல்​கீப்​ப​ரான எமிலி​யானோ மார்ட்​டினெஸ், ஆஸ்​டன் வில்லா கிளப் அணியி​லிருந்து வில​கி, இங்​கிலாந்​தின் முன்​னணி கிளப்​பான செல்சி அணி​யில் 3 ஆண்​டு​கள் ஒப்​பந்​தத்​தில் இணைந்​துள்​ளார்.

எமிலி​யானோ மார்ட்​டினெஸ் கூறும்​போது, “செல்சி அணி​யில் இணைவது எனக்​கும் எனது குடும்​பத்​தினருக்​கும் மிக எளி​தான முடி​வாக இருந்​தது. இதில் நான் மகிழ்ச்​சி​யடைகிறேன். மைதானத்​தில் களமிறங்க ஆவலுடன் காத்​திருக்​கிறேன். இங்கு நான் வெற்​றிகளைப் பெற விரும்​பு​கிறேன். நான் செய்​யும் எல்​லா​வற்​றி​லும் வெற்றி பெற நினைப்​பவன். சாம்​பியன் பட்​டங்​களை வெல்​லும் பாரம்​பரி​யம் கொண்ட செல்சி அணிக்கு அந்த வெற்றி மனநிலையை கொண்​டுவர விரும்​பு​கிறேன்” என்​றார்.

பிரீமியர் லீக் தொடக்க ஆட்​டத்​தில் ஃபுல்​ஹாம் அணிக்கு எதி​ராக செல்​சி​யின் முதன்மை கோல்​கீப்​பர் ராபர்ட் சான்​செஸ் தடு​மாறி இருந்​தார். இதனால் அணியை பலப்​படுத்​தும் வகை​யில் செல்சி அணி​யின் முதன்மை கோல்​கீப்​ப​ராக எமிலி​யானோ மார்ட்​டினெஸ் அணிக்​குள் கொண்​டு​வரப்​பட்​டுள்​ளார்.

ஆஸ்​டன் வில்லா அணி பார்மா கிளப்​பில் இருந்து அமெரிக்​கா​வில் பிறந்த ஜப்​பான் கோல்​கீப்​பர் சீயோன் சுசுகியை இம்​மாதத் தொடக்​கத்​தில் ஒப்​பந்​தம் செய்​திருந்​தது. இதனால் எமிலி​யானோ மார்ட்​டினெஸ் அங்​கிருந்து வெளி​யேறி தற்​போது செல்சி அணி​யில் இணைந்​துள்​ளார்.

2021-ம் ஆண்டு முதல் அர்​ஜெண்​டினா அணி​யின் முதன்மை கோல்​கீப்​ப​ராகச் செயல்​பட்டு வரும் மார்ட்​டினெஸ், இது​வரை 67 சர்​வ​தேசப் போட்​டிகளில் விளை​யாடி​யுள்​ளார். அர்​ஜெண்​டினா அணி 2021 மற்​றும் 2024-ல் கோபா அமெரிக்கா பட்​டங்​களைக் கைப்​பற்​ற​வும், இந்த ஆண்​டின் உலகக் கோப்பை இறு​திப் போட்​டிக்கு முன்​னேற​வும் இவர் முக்​கியக் காரண​மாக இருந்​தார்.

உலகின் மிகச்​சிறந்த கோல்​கீப்​பருக்கு வழங்​கப்​படும் யாஷின் விருதை 2023 மற்​றும் 2024-ம் ஆண்​டு​களில் மார்ட்​டினெஸ் வென்​றிருந்​தார். ஆஸ்​டன் வில்லா அணிக்​காக 6 சீசன்​களில் 256 போட்​டிகளில் விளை​யாடி​யுள்ள மார்ட்​டினெஸ், கடந்த மே மாதம் அந்த அணி ஐரோப்​பா லீக்​ பட்​டத்​தைக்​ கைப்​பற்​ற உதவி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here