இமானுவேல் சேகரன் நினைவுநாள் நாளை அனுசரிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,000 போலீஸார் பாதுகாப்பு

0
329

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நாளை (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் 3 டிஐஜி.க்கள், 19 எஸ்.பி.க்கள், 61 டிஎஸ்பி.க்கள் உள்ளிட்ட 6,200-க்கும் மேற்பட்ட போலீஸார் பரமக்குடி உட்பட மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 150 சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண் காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் பாலகணபதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, மதிமுக சார்பில் துரை வைகோ எம்.பி., நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here